ஜெல்லி ஜவ்வரிசி சர்பத்
2021-10-20@ 17:36:40

தேவையான பொருட்கள்:
இன்ஸ்டண்ட் ஆக்கரக்கா - 1 பாக்கெட் (12 கிராம்)
ஜவ்வரிசி - 200 கிராம்
பால் - 1 லிட்டர்
சீனி - 400 கிராம்
பாண்டான் இலை - 4
ரோஸ் எஸன்ஸ் (பாண்டான் இலை போடாவிட்டால்) - 5 துளிகள்
தண்ணீர் - 3 லிட்டர்
உப்பு - தேவையானஅளவு
செய்முறை:
இன்ஸ்டண்ட் ஆக்கரக்கா, தண்ணீர் 1 லிட்டர், சீனி 150 கிராம், உப்பு 1 தே.கரண்டி, பச்சை நிறம்- 1 தேக்கரண்டி இவை அனைத்தையும் ஒன்றாக காய்ச்சி உறைய விடவும். உறைந்த பின் ஆக்கரக்காவை துருவிக்கொள்ளவும். ஜவ்வரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் 1 தே.கரண்டி உப்பு, ஜவ்வரிசி போட்டு வேகவிடவும். (ஜவ்வரிசி நிறம் மாறிவிட்டால் வெந்துவிட்டதை அறியலாம்). வெந்ததும் அதை தண்ணீரில் கழுவி வடிகட்டியால் வடித்துக்கொள்ளவும். சீனி-250 கிராம்,தண்ணீர்- 1/2 லிட்டர், பாண்டான்இலை 4, உப்பு 1 தே.கரண்டி இவை அனைத்தையும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.(சீனி பாகு) ஒரு பாத்திரத்தில் துருவிய ஆக்கரக்கா,பால்,ஜவ்வரிசி, தண்ணீர், தேவையான அளவு சீனி பாகு இவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து குளிர் பதனப்பெட்டியில் வைத்து சில்லென்று பரிமாறவும்.
Tags:
ஜெல்லி ஜவ்வரிசி சர்பத்மேலும் செய்திகள்
மேங்கோ ஐஸ்க்ரீம்
பீட்ரூட் ஐஸ்கிரீம்
பாதாம் செர்ரி குல்ஃபி
வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம்
ஐஸ் கிரீம் சுய்யம்
தேன் ஐஸ்கிரீம்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!