SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறால் பெப்பர் ப்ரை

2021-10-06@ 17:48:24

தேவையான பொருட்கள்:

இறால் – 400 கிராம்
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – 30 கிராம்
பூண்டு – 30 கிராம்
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிது
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு


செய்முறை :

இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஊற வைக்க வேண்டும். கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டை தோல் உரித்து அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும். பின்னர் அதில் இஞ்சி கலவையை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்க வேண்டும்.அடுத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை 5 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். இறால் அளவுக்கு அதிகமாக வெந்து விடக்கூடாது. இறுதியில் கொத்தமல்லி தழை சேர்த்து பிரட்டினால் இறால் பெப்பர் ப்ரை ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • la-palma-29

    ஆறாக ஓடும் தீக்குழம்பு...நகரையே சிவப்பு நிற போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் லா பால்மா...!!

  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்