SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கம்பு இனிப்பு பணியாரம்

2021-10-06@ 17:43:30

தேவையான பொருட்கள்

கம்பு – 400 கிராம் (¼ பிடி)
உளுந்தம் பருப்பு – 1 குழிக்கரண்டி
வெந்தயம் – 2 ஸ்பூன்
கருப்பட்டி – 300 கிராம்
ஏலக்காய் – 2 அல்லது 3 எண்ணம்
நல்ல எண்ணெய் – சிறிதளவு


செய்முறை

கம்பு, உளுந்தம் பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து தண்ணீரில் நான்கு மணிநேரம் ஊற வைக்கவும். கருப்பட்டியை சிறு சிறு துண்டுகளாக நொறுக்கிக் கொள்ளவும். ஏலக்காயை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும். நான்கு மணிநேரம் ஊறிய பின்பு ஆட்டு உரலில் இட்டு ஆட்டவும். மாவானது பாதி ஆட்டிய நிலையில் சிறுதுண்டுகளாக்கிய கருப்பட்டியை சேர்த்து ஆட்டவும். கருப்பட்டியை சேர்த்து ஓரிரு நிமிடங்களில் நசுக்கிய ஏலக்காயைச் சேர்க்கவும். கம்பு மாவினை இட்லிப் பதத்தில் ஆட்டி எடுக்கவும்.

சுமார் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும். கம்பு குழிப்பணியாரத்திற்கான மாவு தயார். குழிப்பணியாரக் கல்லினை அடுப்பில் வைக்கவும். கல் சூடு ஏறியதும் குழிகளில் சிறிது எண்ணெய் தடவவும். பின் பணியாரக் குழியின் முக்கால் பாகத்திற்கு மாவினை ஊற்றவும். அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும். பணியாரத்தின் ஓரங்களில் வெந்த பின் குச்சியைக் கொண்டு திருப்பி விடவும். பின்புறம் வெந்தபின் பணியாரங்களை எடுத்து விடவும். சுவையான கம்பு இனிப்பு பணியாரம் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்