SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடியாப்பம்

2021-10-04@ 17:56:11

தேவையான பொருள்கள்:

பச்சரிசி மாவு - ஒன்றரை கப்,
தண்ணீர் – அரை கப்,
நாட்டுச் சர்க்கரை -  தேவையான அளவு
தேங்காய்த் துருவல் - ஒரு மூடி
உப்பு - தேவையான அளவு,
நெய் - ஒரு டீஸ்பூன்


செய்முறை:

அகலமான பாத்திரத்தில், ஒன்றரை கப் மாவுடன் தேவையான அளவு உப்பு போட்டுப் பிசைந்துகொள்ள வேண்டும். பிறகு, சிறிது சிறிதாக தண்ணீர்விட்டு மாவை நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும். மாவு மென்மையாக இருக்க வேண்டும். கையில் ஒட்டக்கூடாத பதத்திற்கு இருக்க வேண்டும். இந்தப் பதத்துக்கு வந்தபிறகு, மாவை இடியாப்ப அச்சில் வைத்து இட்லித் தட்டில் பிழியவும். பிறகு, ஐந்து நிமிடங்கள் ஆவியில் வேகவைக்க வேண்டும். சாப்பிடும்போது நாட்டுச்சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, நன்றாகக் கலந்து சாப்பிட வேண்டும். இத்துடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிடலாம். அசைவ பிரியர்கள் ஆட்டுக்கால் பாயாவுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை மிகுந்ததாக இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • omigron-7

    ஒமிக்ரான் தொற்றால் பயம் வேண்டாம்!: சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் தனி வார்ட் ரெடி..!!

  • rannnasss

    பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 4ம் திருநாள்!!

  • tomatoes

    கோயம்பேடு மார்க்கெட்டில் கெத்து காட்டும் தக்காளி

  • chennai-7

    ஒண்ணுமே தெரியலியே: கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புழுதி பறப்பதால் அல்லல்படும் வாகன ஓட்டிகள்..!!

  • suna1122

    கண்ணை கசக்கும் சூரியனோ.... சூரியனின் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்த வானியல் புகைப்பட வல்லுநர்!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்