குடைமிளகாய் பொரியல்
2021-09-30@ 17:44:58

தேவையான பொருட்கள்
குடைமிளகாய் – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 150 கிராம்
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 1 எண்ணம் (சிறியது)
தாளிக்க
நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்
கறிவேப்பிலை – இரண்டு கீற்று
கடுகு – ½ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் குடைமிளகாயை நன்கு கழுவிக் கொள்ளவும். பின் அதனை சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். அதனையும் சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கழுவி நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய், கறிவேப்பிலை, கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின் அதில் சதுரத் துண்டுகளாக வெட்டிய சின்ன வெங்காயம், நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வெந்த நிலையில் சதுரத் துண்டுகளாக வெட்டியுள்ள குடைமிளகாயினைச் சேர்க்கவும். 5 நிமிடங்கள் வதக்கி அடுப்பில் இருந்து இறக்கவும். சுவையான மணமான குடைமிளகாய் பொரியல் தயார்.
Tags:
குடைமிளகாய் பொரியல்மேலும் செய்திகள்
பலாக்கொட்டை காரப் பொரியல்
கொத்தவரைப் பொரியல்
பூசணி அவியல்
பீர்க்கங்காய் முட்டை பொரியல்
ப்ரோக்கோலி பொரியல்
வாழைப்பூ பொரியல்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்