SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரகு புலாவ்

2021-09-29@ 17:44:25

என்ன தேவை?

வரகு - 1 கப்
தண்ணீர் - 1 & 1/2 கப்
கேரட்,
பீன்ஸ்,
பட்டாணி  - 1 கப்
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
புதினா இலை - 12
உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க

நெய் - 2 மேஜைக்கரண்டி
பட்டை - 1
சோம்பு - 1 தேக்கரண்டி
பிரியாணி இலை - 1


எப்படி செய்வது?

ஒரு சிறிய குக்கரை சூடு செய்து, பட்டை, சோம்பு, பிரியாணி இலை சேர்த்து, வதக்கவும். வெங்காயம் சேர்த்து, 1 நிமிடம் வதக்கவும். இஞ்சி பூண்டு  விழுது சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும். பொடியாக நறுக்கிய காய்களை சேர்த்து, புதினா மற்றும், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.  வரகை, களைந்து, தண்ணீரை வடித்து காயுடன் சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும். தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து, கொதிக்க விடவும். மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். வெங்காய தயிர் பச்சடியுடன் சூடாக பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • christmas-30

    நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை: ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் வெள்ளை மாளிகையின் புகைப்படங்கள்..!!

  • la-palma-29

    ஆறாக ஓடும் தீக்குழம்பு...நகரையே சிவப்பு நிற போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் லா பால்மா...!!

  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்