SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோதுமை ரவை சோமாஸ்

2021-09-29@ 17:36:11

தேவையானவை:

வறுத்த ரவை - 50 கிராம்,
முந்திரி - 10,
வறுகடலை - 50 கிராம்,
வறுத்த கடலைக்காய் - 50 கிராம்,
கொப்பரை துருவல் - 4 டீஸ்பூன்,
சர்க்கரை - 100 கிராம்,
காய்ந்த திராட்சை - 50,
ஏலக்காய் - 4,
நெய் - 4 டீஸ்பூன்,

மேல் மாவு செய்ய:

கோதுமை மாவு - 250 கிராம்,
ரவை - 100 கிராம்,
பால் - 100 மிலி,
உப்பு -  சிட்டிகை,
எண்ணெய் பொரிக்க - 300 கிராம்.


செய்முறை:

கோதுமை மாவு, ரவை, உப்பு, பால் இவைகளை ஒரு பாத்திரத்தில் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்துக்கொள்ளவும். அதே வாணலியில் ரவை,  திராட்சை தனித்தனியே வறுக்கவும். மிக்ஸியில் ரவை, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, வறுகடலை, வறுத்த கடலைக்காய் சேர்த்து கரகரப்பாய் பொடித்து வறுத்த திராட்சை சேர்க்கவும். பிசைந்த மாவில் சிறு பூரிகளாய் இட்டு, பொடித்த ரவை கலவையை 2 டீஸ்பூன் வைத்து மூடி, ஓரத்தை ஒட்டிக்கொள்ளவும். பின்பு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான சோமாஸ் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • etna-volcano-23

    இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

  • sandjakki11

    "மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!

  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்