SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கார்ன் பனீர் டிக்கா

2021-09-28@ 17:29:17

தேவையானவை:

வேகவைத்த கார்ன் - ஒரு கப்
துருவிய பனீர் - அரை கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
பிரெட் தூள் - அரை கப்
எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்

எண்ணெய்,
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:

வேகவைத்த கார்னை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பெரிய பாத்திரத்தில் அரைத்த கார்ன், துருவிய பனீர், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், புதினா, சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள், பிரெட் தூள், உப்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு அதை வட்டமான கட்லெட் போல செய்துகொள்ளவும். ஒரு தோசைக்கல்லை சூடாக்கி, அதில் செய்துவைத்துள்ள டிக்கிகளை ஒவ்வொன்றாகப் போட்டு, எண்ணெய்விட்டு இரண்டு புறமும் திருப்பிப்போட்டு பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும். தக்காளி சாஸ், புதினாச் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்