SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரமல் பாயசம்

2021-09-23@ 17:28:24

தேவையானவை:

பச்சரிசி - 2 தேக்கரண்டி
பால் - 200 மி.லி
சீனி - 4 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 5
கிஸ்மிஸ் பழம் - 5
ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு பின்ச்

கேரமல் செய்ய :

சீனி - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 1 தேக்கரண்டி


செய்முறை:

பச்சரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். (ஒன்றிரண்டாக உடைத்தால் போதும்) குக்கரில் சீனி மற்றும் தண்ணீர் சேர்த்து கேரமல் தயார் செய்யவும். கேரமல் தயாரானதும் உடைத்த அரிசியை சேர்த்து நன்கு கலந்து விடவும். அரிசியுடன் பால், 1 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி சிறு தீயில் 3 விசில் விடவும். குக்கரை திறந்து சீனி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து 3 - 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். தாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் பழம் சேர்த்து வறுத்து பாயசத்துடன் சேர்க்கவும். சுவையான கேரமல் பாயசம் ரெடி. சூடாக பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • burundi-fire-8

    புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

  • pain-kill

    வலியின்றி தற்கொலை செய்துகொள்ள வந்துவிட்டது Sarco Capsule எந்திரம்!: ஒரு நிமிடத்தில் உயிரை பறிக்குமாம்..!!

  • Army_helicopter_crash_Coonoor

    குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்

  • tomato01

    பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ 73 ரூபாய்க்கு விற்பனை

  • vaikundaa1

    பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 5ம் திருநாள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்