SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோயா கைமா குழம்பு

2021-09-21@ 17:20:43

தேவையானவை:

சோயா உருண்டைகள் - 20,
பச்சைப் பட்டாணி (விருப்பப்பட்டால்) - கால் கப்,
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 4,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

பட்டை - ஒரு துண்டு,
சோம்பு - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - கால் கப்.

அரைக்க:

தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி - ஒரு துண்டு,
பூண்டு - 6 பல்,
சோம்பு - அரைடீஸ்பூன்,
மிளகாய்தூள் - இரண்டரை டீஸ்பூன்,
தனியாதூள் - ஒரு டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 6.


செய்முறை:

சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் ஊறவிட்டு, பிறகு பச்சைதண்ணீரில் போட்டு 2 முறை அலசிப் பிழிந்து பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அல்லதுமிக்ஸியில் போட்டு, ஒரு சுற்றுச் சுற்றி எடுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாகநறுக்கிக்கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைஒன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பட்டை, சோம்பு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் சிறிது வதங்கியதும், சோயாவை அதனுடன் சேர்த்து, 5நிமிடம் வதக்கி அதில் அரைத்த விழுது, தக்காளி சேர்த்து (பட்டாணி சேர்ப்பதானால், அதையும்இப்போது போட்டு) பச்சை வாசனை போக வதக்குங்கள். தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து,சற்று தளதளவென இருக்கும்போது இறக்கி, மல்லித்தழை, கறிவேப்பிலை சேருங்கள். சாதம், இட்லி,இடியாப்பம், சப்பாத்தி எல்லாவற்றுக்கும் ஈடுகொடுக்கும் இந்தக் கைமா குழம்பு.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • christmas-30

    நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை: ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் வெள்ளை மாளிகையின் புகைப்படங்கள்..!!

  • la-palma-29

    ஆறாக ஓடும் தீக்குழம்பு...நகரையே சிவப்பு நிற போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் லா பால்மா...!!

  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்