SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கமர்கட்டு

2021-09-21@ 17:12:00

தேவையான பொருட்கள் :

துருவிய தேங்காய் - ஒரு கப்
வெல்லம் - முக்கால் கப்,
நல்லெண்ணெய் - அரை டீஸ்பூன்


செய்முறை :

துருவிய தேங்காயை மிக்ஸியில் சேர்த்து நீர் விடாமல் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரையவிட்டு, அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து நுரைத்து வரும் வரை கொதிக்க விடவும். நுரைத்து வந்ததும் அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு சுருள வதக்கி நல்லெண்ணெய் சேர்க்கவும். கலவை நன்கு முற்றிய நிலையில் வரும் போது இறக்கி, ஆறி இறுகுவதற்குள் வேகமாக சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். கை சூடு பொறுக்கவில்லை என்றால், முதலில் கைக்கு வருவது போல் உருட்டிப் போட்டு விட்டு, பிறகு நன்கு அழுத்தி உருண்டை வடிவமாக உருட்டிப் போடவும். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • burundi-fire-8

    புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

  • pain-kill

    வலியின்றி தற்கொலை செய்துகொள்ள வந்துவிட்டது Sarco Capsule எந்திரம்!: ஒரு நிமிடத்தில் உயிரை பறிக்குமாம்..!!

  • Army_helicopter_crash_Coonoor

    குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்

  • tomato01

    பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ 73 ரூபாய்க்கு விற்பனை

  • vaikundaa1

    பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 5ம் திருநாள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்