SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாம்பழ ஃபலூடா

2021-09-14@ 17:37:43

தேவையானவை:

பால் – ஒரு கப்  
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்
கண்டெண்ஸ்டு மில்க் – 2 டேபிள்ஸ்பூன்
மாம்பழக்கூழ் – 2 டேபிள்ஸ்பூன்
மாம்பழத் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன்
மாம்பழ ஐஸ்க்ரீம்,
வெனிலா ஐஸ்க்ரீம் – தலா 2 டேபிள்ஸ்பூன்
துளசி விதைகள் – ஒரு டீஸ்பூன்
ஜெல்லித் துண்டுகள் – டேபிள்ஸ்பூன்
ஃபலூடா சேமியா – ஒரு டேபிள்ஸ்பூன்
பொடித்த நட்ஸ் வகைகள் – 2 டேபிள்ஸ்பூன்
ரோஸ் சிரப் – ஒரு டேபிள்ஸ்பூன்


செய்முறை:

துளசி விதைகளை அரை கப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஃபலூடா சேமியாவை வேகவத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் பாலை ஊற்றி, பாதியாகும் வரை சுண்டக் காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து, கரைந்த பின் இறக்கவும். பால் நன்கு ஆறிய பின் ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும். உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் ஊறிய துளசி விதைகளைப் போடவும். இதன் மீது ஜெல்லித் துண்டுகள், மாம்பழத் துண்டுகள், கண்டென்ஸ்டு மில்க், பலூடா சேமியா, மாம்பழக்கூழ், குளிர்ந்த பால் என ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். இறுதியாக மேலே ஐஸ்க்ரீம் வைத்து, அதன் மீது ரோஸ் சிரப் ஊற்றி, நட்ஸ் வகைகள் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thaipoosam

    ஶ்ரீ பத்துமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கோலாகலம்

  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்