SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நூடுல்ஸ் பக்கோடா

2021-09-13@ 17:37:58

தேவையானவை:

நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்  
கேரட்,
குடமிளகாய் - தலா ஒன்று  
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - அரை கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று  
கடலை மாவு - அரை கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை:

பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். நூடுல்ஸை மட்டும் வேகவிட்டு இறக்கி வடிகட்டவும். அகலமான பவுலில் கேரட், குடமிளகாய், கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கடலை மாவு, உப்பு, நூடுல்ஸ் மசாலா (டேஸ்ட் மேக்கர்) சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வடிகட்டிய நூடுல்ஸ் சேர்த்து மிருதுவாகக் கலக்கவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்). வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். நூடுல்ஸ் கலவையை ஸ்பூனில் எடுத்து மெதுவாக பக்கோடாக்கள் போல் செய்து கவனத்துடன் எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பக்கோடாக்களைச் சுத்தமான கிச்சன் டவலில் போட்டு அதிகப்படியான எண்ணெயை நீக்கவும். தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • christmas-30

    நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை: ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் வெள்ளை மாளிகையின் புகைப்படங்கள்..!!

  • la-palma-29

    ஆறாக ஓடும் தீக்குழம்பு...நகரையே சிவப்பு நிற போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் லா பால்மா...!!

  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்