SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லெமன் இடியாப்பம்

2021-09-02@ 17:57:00

தேவையான பொருட்கள் :

இடியாப்ப மாவு - 2 கப்,
எலுமிச்சம் பழம் - 1,
உப்பு - தேவைக்கு.

தாளிக்க...

கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தேவையான அளவு,
பெருங்காயத்தூள் - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
கொத்தமல்லி - சிறிதளவு.


செய்முறை :

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை மளமளவென கொதிக்க வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இடியாப்ப மாவில் உப்பு சேர்த்து கலந்து கொதிக்கும் தண்ணீரை ஊற்றி மத்தினால் கிளறி மாவை பிசைந்து கொள்ளவும். மாவை அச்சில் போட்டு இடியாப்பம் பிழிந்தெடுத்து, ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை நிறுத்தி இறக்கவும். இப்பொழுது எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கிளறி, ஆறியதும் இடியாப்பத்தில் கொட்டி கலந்து உதிரியாக பிசறி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்