உருளைக்கிழங்கு பொடிமாஸ்
2021-09-01@ 17:40:07

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 200 கிராம்
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
உருளைக்கிழங்கை நன்கு கழுவி மெல்லியதாகவும், சிறியதாகவும் நறுக்கி, அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து பிசறிக் கொள்ளவும். அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகாய்த் தூள், கரம் மசாலாவைச் சேர்த்து, அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கையும் சேர்த்து கிளறவும். அடுப்பின் தணலை குறைவாக வைத்து, சிறிது தண்ணீர் தெளித்து கிளறி மூடி வைத்து வேகவிடவும். அரை வேக்காடு வெந்ததும் உப்பு சேர்க்க வேண்டும். பாத்திரம் அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விடவும். அதிகம் வேக விட்டால் கிழங்கு ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். ஆகவே, முக்கால் பதம் வெந்ததும் இறக்கி வைத்து, ஒரு ஐந்து நிமிடம் மூடி வைத்து பிறகு பரிமாறவும்.
Tags:
உருளைக்கிழங்கு பொடிமாஸ்மேலும் செய்திகள்
படோலி
வாழைக்காய் மிளகு வறுவல்
சீமைச்சக்கை தொவரன்
பலாக்கொட்டை காரப் பொரியல்
கொத்தவரைப் பொரியல்
பூசணி அவியல்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!