SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரஞ்சு குச்சி ஐஸ்

2021-08-19@ 17:29:29

தேவையான பொருட்கள்:

சிறிய ரக ஆரஞ்சு - 7 அல்லது 8
சீனி - 1/4 கப்
தண்ணீர் - 1/4 கப்
எலுமிச்சை - 1 (சிறியது)


செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சை தோல் உரித்து விதை நீக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீரும் சீனியும் சேர்த்து கரைந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆற வைக்கவும். உரித்த ஆரஞ்சுகளை பருப்பு மத்து அல்லது குழிக்கரண்டியின் பின்புறத்தை வைத்து நன்கு அழுத்தி சாறு எடுக்கவும். எடுத்த சாறை ஒரு வடிகட்டி வைத்து மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவும். ஆரஞ்சு சாறுடன் எலுமிச்சை சாறு, சீனி தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கலந்து வைத்துள்ள ஆரஞ்சு சாறை ஐஸ் மோல்டில் ஊற்றி ஃப்ரீஸரில் 8 மணி நேரம் வைக்கவும். 8 மணி நேரம் கழித்து குழாயில் ஓடும் நீரில் மோல்டை காட்டி ஐஸ்களை வெளியே எடுக்கவும். சுவையான ஆரஞ்சு ஐஸ் தயார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • ragul-inde-15

    டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

  • independence-15

    75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்