SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முள்ளங்கி கீரை பொரியல்

2021-08-16@ 17:36:47

தேவையான பொருட்கள் :

முள்ளங்கி கீரை     -   1 கட்டு
பெரிய வெங்காயம்,       -     1
சிகப்பு மிளகாய்       -      1 அல்லது 2
காரட் பொடியாக அரிந்தது    -    1  டீஸ்பூன்
கடுகு        -   1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு    -   1  டீஸ்பூன்
தேங்காய் துருவல்      -   2 டீஸ்பூன்
எண்ணெய்       -     1 டீஸ்பூன் 


செய்முறை :

கீரையை சுத்தம் செய்து தண்டு பகுதியை தனியாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். கீரையையும் பொடியாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கவும். சூடேறியதும் கடுகை வெடிக்க விடவும். அதன் பிறகு உளுத்தம் பருப்பு மற்றும் சிகப்பு மிளகாயை உடைத்து சேர்க்கவும். பருப்பு சிவந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதன் பிறகு வெட்டி வைத்துள்ள தண்டு பகுதியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பின்னர் கீரையையும் காரட் துண்டுகளையும் சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து கிளறி மூடி கீரை வேகும் வரை சிறிய தீயில் வைத்திருக்கவும். கீரை பச்சை நிறம் மாறாமல் வேக வைக்கவும். வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும்.
தண்ணீர் சுண்டும் வரை தீயை அதிகப் படுத்தி விடாமல் கிளறி இறக்கவும். பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

குறிப்பு: ரசம் மற்றும் சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட ஏற்ற பொரியல்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • omicron virus

    ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்