சிக்கன் கறி தோசை
2021-08-12@ 17:26:34

தேவையானவை:
சிக்கன் - 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
தக்காளி - 1,
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் 1/4 டீஸ்பூன்,
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி தழை சிறிதளவு,
எண்ணெய் தேவையான அளவு,
சோம்பு,
பட்டை - தாளிக்க,
உப்பு - தேவையான அளவு,
முட்டை - 2,
தோசைமாவு - 1 கப்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்.
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து உப்பு சேர்த்து வேகவைக்கவும். ஆறியபின் எலும்பு நீக்கி சிறியதாக கைகளால் பிய்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், கரம்மசாலா, சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவேண்டும். சிக்கன் சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.
ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி முதலில் அதன்மேல் முட்டையை உப்பு சேர்த்து அடித்து ஊற்றவும். சிறுதீயில் வைத்து அதன் மேல் வதக்கி வைத்துள்ள சிக்கன் மசாலாவை பரவலாக போட்டு மாவை சுற்றி எண்ணெய் ஊற்றவும். பின்னர் திருப்பிப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சூடான கறி தோசை ரெடி. இதனை சிக்கன் சால்னாவுடன் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
Tags:
சிக்கன் கறி தோசைமேலும் செய்திகள்
ஆட்டையாம்பட்டி முறுக்கு அமெரிக்காவில் கமகமக்குது
ஹோட்டல் உணவை வீட்டிலேயே செய்யலாம்!
உணவுத் தொழிற்சாலை
தேன் மிட்டாய்
இலந்தைவடை
கமர் கட்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!