SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீலி வடவம்

2021-08-03@ 17:44:16

என்னென்ன தேவை?

புழுங்கல் அரிசி - 1 கிலோ,
ஜவ்வரிசி - 50 கிராம்,
பச்சைமிளகாய் - 6,
உப்பு - தேவைக்கு,
இஞ்சி - சிறிய துண்டு,
நல்லெண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து நைசாக அரைக்கவும். ஜவ்வரிசியை 3 மணி நேரமும், புழுங்கல் அரிசியை 1 மணி நேரமும் ஊறவைத்து தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் காலை 1/2 லிட்டர் தண்ணீரில் அரைத்தவற்றை கரைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில்
1 லிட்டர் தண்ணீர், உப்பு, அரைத்த விழுது சேர்த்து கொதிக்கவைத்து, கரைத்த மாவு கலவையை ஊற்றி அடிபிடிக்காமல் கைவிடாமல் கிளறவும். மாவு வெந்து கலர் மாறி வந்ததும் இறக்கி விடவும். கூழ் ரெடி.

பிளாஸ்டிக் ஷீட் முழுவதும் நல்லெண்ணெய் தடவி முறுக்கு அச்சில் மாவினை போட்டு நீள நீளமாக பிழியவும். மாவு முழுவதையும் இதே போல் பிழியவும். வெயிலில் காயவைக்கவும். மறுநாள் இந்த வடவத்தை மறுபுறம் திருப்பி வைக்கவும். மொத்தம் 5 நாட்கள் வெயிலில் நன்கு காயவைக்கவும். சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து மேலே சாட் மசாலாத்தூள் தூவி சாப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்