SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பச்சைப்பட்டாணி காரப்பொரியல்

2021-03-25@ 17:28:45

என்னென்ன தேவை?

சதுரமாக நறுக்கிய பலாமோசு (பலாப் பழத்தின் பிஞ்சு) - 1 கப்,
பச்சைப்பட்டாணி - 4 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1½ டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், பலாமோசு போட்டு அரைவேக்காடு வேகவிட்டு எடுத்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், உப்பு, பச்சைப்பட்டாணி, பலாமோசு சேர்த்து வதக்கி மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து பலாமோசு வெந்ததும் தேங்காய்த்துருவலை தூவி நன்றாக கிளறி இறக்கவும். சாம்பார், ரசம், குழம்பு சாதத்துடன் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்