SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெல்ல சீடை

2021-03-03@ 17:45:51

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்(பதப்படுத்தியது),
வறுத்த உளுந்து மாவு - 1 டேபிள் ஸ்பூன்,
வெண்ணெய் - 25 கிராம்,
வெல்லம் துருகியது - 1/2 கப்,
தேங்காய்ப்பால் - மாவு பிசைய தேவையான அளவு,
எண்ணெய் + நெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
உப்பு - 1 சிட்டிகை,
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்.


செய்முறை

ஒரு வாய் அகன்ற பேஷனில் அரிசி மாவு, உளுந்து மாவு, வெண்ணெய், உப்பு, ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.  தேங்காய்ப்பாலுடன், துருகிய வெல்லத்தை கரைத்து மாவில் ஊற்றி பதமாக சப்பாத்தி மாவு போல பிசைந்துகொள்ளவும். சிறு, சிறு உருண்டையாக உருட்டி சுத்தமான துணியில் பரப்பி 2-3 மணி நேரம் அப்படியே விட்டு விடவும். (ஈரப்பதத்தை துணி உறிஞ்சு கொள்ளும், வெடிக்காது சீடை) பிறகு வாணலியில் நெய் + எண்ணெய் சேர்த்து அடுப்பை பற்ற வைத்து, சூடானதும் வாணலி கொள்ளும் வரை சீடையைப் போட்டு மொறுமொறுப்பாக பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

  • egypt-20

    எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!

  • dell_aacccc

    கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்