சேமியா ஸ்டஃப்டு பிரெட்
2021-02-23@ 17:57:28

என்னென்ன தேவை?
சேமியா - 100 கிராம்,
மசித்த உருளைக்கிழங்கு - 2,
கரம்மசாலாத்தூள் - 1/4 சிட்டிகை,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் - 1,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
வெண்ணெய் - 50 கிராம்,
சால்ட் பிரெட் - 8 ஸ்லைஸ்,
கொத்தமல்லி - சிறிது.
எப்படிச் செய்வது?
சுடுநீரில் சேமியா, உப்பு, எண்ணெய் சேர்த்து வடிகட்டி அலசி உதிர்க்கவும். கடாயில் வெண்ணெயை சூடாக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் உதிர்த்த சேமியா, கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி, மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கலந்து, சேமியா வெந்ததும் இறக்கவும். இந்தக் கலவையை எடுத்து இரண்டு பிரெட்களின் நடுவே வைத்து வெண்ணெய் தடவி இருபுறமும் சுட்டு எடுத்து பரிமாறவும்.
Tags:
சேமியா ஸ்டஃப்டு பிரெட்மேலும் செய்திகள்
பனீர் பால்ஸ்
கிழங்கு ரோல் சமோசா
ஃப்ரூட் கஸ்டர்ட்
லெமன் சேமியா பிடி கொழுக்கட்டை
வெள்ளரிக்காய் தக்காளி சாலட்
மாம்பழ சேமியா குல்ஃபி
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!