உருளை டொமேட்டோ ஃப்ரை
2021-02-11@ 17:37:34

என்னென்ன தேவை?
பெங்களூர் தக்காளி - 3,
பெரிய வெங்காயம் - 1,
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்,
உருளைக்கிழங்கு - 200 கிராம்,
கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை - சிறிது,
பச்சைமிளகாய் - 3,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். நன்கு வதக்கி வறவறவென ஆனதும் இறக்கி, கறிவேப்பிலையை போட்டு பிரட்டி பரிமாறவும்.
குறிப்பு: காலிஃப்ளவர், புரோக்கோலி, குடைமிளகாயிலும் செய்யலாம். தேவையானால் கஸ்தூரிமேத்தியை சேர்க்கலாம்.