5 மாவு மிக்ஸ் பணியாரம்
2021-02-10@ 17:41:19

தேவையான பொருட்கள்:
இட்லி மாவு-5 மேஜைக்கரண்டி,
கோதுமை மாவு-1 மேஜைக்கரண்டி,
கடலை மாவு-1 மேஜைக்கரண்டி,
ரவை-1 மேஜைக்கரண்டி,
ராகி மாவு -2 மேஜைக்கரண்டி,
எண்ணெய் - தேவையான அளவு,
துருவிய கேரட் - 2 மேஜைக்கரண்டி,
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1 ,
உப்பு - தேவையான அளவு,
பச்சை மிளகாய் - 2,
தேங்காய்த்துருவல் - 2 மேஜைக்கரண்டி,
நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் மாவு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து தோசை மாவுப் பதத்தில் உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம் 1\4 பச்சை மிளகாய் 1\4 மல்லித்தழையைச் சேர்த்து ஒரு சுற்று அரைத்துக் கொள்ளவும். கடாயில் சுமார் 2 டீஸ்பூன் எண்ணெயைச் சேர்த்து சூடானதும் உளுந்தம் பருப்பு, அரைத்தவை, துருவிய கேரட், தேங்காயைச் சேர்த்து வதக்கவும். இதனை மாவில் சேர்த்து கலக்கவும். கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். பணியாரக் கல்லைச் சூடு செய்து குழியில் எண்ணெய் விட்டு கரைத்த மாவை, ஒரு சிறு குழிக்கரண்டியில் எடுத்து பணியாரக்குழியில் சேர்த்து இருபுறமும் திருப்பிப் போட்டு மொறு மொறு வெனச் சுட்டு எடுக்கவும். சுவையான சாம்பாருடன் பேக் செய்து கொடுக்கவும்.
குறிப்பு: பீன்ஸ், முட்டைக்கோஸ், பீட்ரூட், டர்னீப் சேர்த்தும் 5 மாவு மிக்ஸ் பணியாரத்தைச் செய்யலாம்.
Tags:
5 மாவு மிக்ஸ் பணியாரம்மேலும் செய்திகள்
பழத்தயிர் பச்சடி
முருங்கைக்கீரை துவையல்
தர்பூசணி ரசம்
முளைகட்டிய சோளம் இட்லி
இயற்கை மோர்
கேழ்வரகு வடை
விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!
நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!