SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராகி அம்மணி கொழுக்கட்டை

2021-01-25@ 17:51:38

தேவையான பொருட்கள்
 
ராகி மாவு - 1/2 கப் (கேழ்வரகு மாவு),
தண்ணீர் - 1/2 கப்,
உப்பு - தேவைக்கு,

தாளிக்க:

எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - சிறிது,
உளுத்தம்பருப்பு - சிறிது,
சிவப்பு மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்.


செய்முறை

ராகி மாவை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். தண்ணீரை கொதிக்க வைத்து வறுத்து வைத்துள்ள மாவில் ஊற்றி உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து, பின் வேக வைத்துள்ள ராகி அம்மணி கொழுக்கட்டை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். சீனி, தேங்காய்த் துருவல் சேர்த்து இனிப்பு அம்மணி கொழுக்கட்டையும் செய்யலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • military-helicopter5

    துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!

  • 05-03-2021

    05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 100farmmmm

    100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?

  • train4

    கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!

  • mars-4

    செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்