இறால் பொடிமாஸ்
2021-01-20@ 17:57:32

என்னென்ன தேவை?
தேங்காய் எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,
கடுகு,
சீரகம்,
சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 2,
இடிச்ச பூண்டு - 5 பல்,
கறிவேப்பிலை,
உப்பு,
கொத்தமல்லி - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
இறால் - 300 கிராம்,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்.
எப்படிச் செய்வது?
கடாயில் தேங்காய் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம், சோம்பு தாளித்து பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் வதக்கி இறால் சேர்த்து நன்றாக வதக்கி தேங்காய்த்துருவல், கொத்தமல்லித்தூவி இறக்கவும்.