SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெஜ் கிரிஸ்பி

2021-01-19@ 17:40:32

என்னென்ன தேவை?

கேரட், உருளைக்கிழங்கு,
குடைமிளகாய்,
வெங்காயம் - தலா பாதியளவு,
காலிஃப்ளவர் - 1/4 துண்டு,
மஷ்ரூம் - 8,
கார்ன்ஃப்ளார் - 5 டேபிள்ஸ்பூன்,
மைதா - 4 டேபிள்ஸ்பூன்,
பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்,
செலரி - 2 இன்ச்,
பச்சைமிளகாய் - 2,
ஸ்பிரிங் ஆனியன் - சிறிது,
சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
ரெட் சில்லி பேஸ்ட் - 1½ டீஸ்பூன்,
டொமேட்டோ கெட்சப் - 2½ டேபிள்ஸ்பூன்,
உப்பு,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

அனைத்து காய்கறிகளையும் ஒரே அளவில் வெட்டி உப்பு, தண்ணீர் ஊற்றி வேகவைத்து கொள்ளவும். பிறகு தண்ணீரை வடித்து விட்டு 1 டீஸ்பூன் மைதா மற்றும் 1 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் சேர்த்து காய்களை பிரட்டி வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, பெப்பர் சேர்த்து குளிர்ந்த தண்ணீர் ஊற்றி தண்ணியாக மாவை கரைத்துக் கொள்ளவும். பிறகு காய்களை மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் பொறித்தெடுக்கவும். கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், செலரி, பூண்டு சேர்த்து வதக்கி ரெட் சில்லி பேஸ்ட், டொமேட்டோ கெட்சப், சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து பொரித்த காய்களை சேர்த்து நன்கு பிரட்டி ஸ்பிரிங் ஆனியன் தூவி இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rasya-frozen9

    சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!

  • 09-03-2021

    09-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • labor8

    ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!

  • transgender8

    நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்

  • nasaaa_mmm

    செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்