கேரட் பொங்கல்
2021-01-12@ 17:46:27

தேவையான பொருட்கள்
கேரட் - 200 கிராம்,
பச்சரிசி - 400 கிராம்,
தேங்காய் - 1 மூடி,
சர்க்கரை - 300 கிராம்,
நெய் - 100 கிராம்,
ஏலக்காய் - 6,
முந்திரி - 15,
கிசுமுசுப்பழம் - 20.
செய்முறை
கேரட்டைக் கழுவி தோல் சீவி துருவிக்கொள்ளவும். தேங்காயையும் துருவவும். வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும் கிசுமுசுப்பழம், இரண்டாக உடைந்த
முந்திரியைப் போட்டு வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் தேங்காய்த்துருவல், கேரட் துருவலை தனித்தனியாக வறுக்கவும். ஏலக்காயை பொடியாக தட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதித்ததும், அரிசியை போட்டு வேகவிடவும். 3/4 பாகம் வெந்தவுடன் சர்க்கரையை போட்டுக் கிளறவும். பிறகு துருவி வைத்துள்ள கேரட், தேங்காய் போட்டு நெய்யை கொஞ்சம், கொஞ்சமாகப் போட்டுக் கிளற வேண்டும். எல்லாம் ஒன்றாகக் கலந்தபின், பதமாக வந்ததும் முந்திரி, கிசுமுசுப்பழம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
Tags:
கேரட் பொங்கல்மேலும் செய்திகள்
நெல்லிக்காய் சாதம்
ப்ளெயின் குஸ்கா
கத்தரிக்காய் பச்சடி
அவல் முந்திரி பொங்கல்
காலிபிளவர் பாப்கார்ன்
உருளைக்கிழங்கு கம்பு ரொட்டி
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!