வாழை இலை ஃபிஷ் ஃப்ரை
2021-01-11@ 17:22:03

என்னென்ன தேவை?
மீனை பொரிக்க...
நெய் மீன் அல்லது வஞ்ஜர மீன் - 200 கிராம்,
லெமன் ஜூஸ் - சிறிது,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு,
சோம்புத்தூள்,
மஞ்சள் தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
கிரேவி செய்ய...
பொடியாக நறுக்கிய வெங்காயம்,
தக்காளி - தலா 1/2 கப்,
டொமேட்டோ சாஸ் - 1/4 கப்,
பொடியாக நறுக்கிய இஞ்சி,
பூண்டு - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 2½ டீஸ்பூன்,
கடுகு,
வெந்தயம் - சிறிது,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
வாழை இலையில் வைத்து மடிக்க...
பெரிய வாழை இலை - 1,
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2,
இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - சிறிது.
எப்படிச் செய்வது?
மீன் பொரிக்க கொடுத்த பொருட்களை கலந்து மீனில் பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு எண்ணெயில் பொறித்தெடுக்கவும். மொறு மொறுவென்று பொரிக்கத் தேவையில்லை. கிரேவிக்கு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, வெந்தயம் தாளித்து இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி டொமேட்டோ சாஸ், உப்பு, மிளகாய்த்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கவும். வாழை இலையை தீயில் வாட்டிக் கொள்ளவும். பின் இலையின் மேல் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மற்றும் கிரேவியை வைத்து அதன் மேல் மீனை வைத்து மீனின் மேல் கிரேவி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு வைத்து இலையை நன்றாக மடித்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு வாைழ இலையுடன் கூடிய மீனை வைத்து மூடி போட்டு இருபுறமும் பிரவுன் கலர் வரும் வரை மிதமான தீயில் சுட்டு எடுக்கவும்.
Tags:
வாழை இலை ஃபிஷ் ஃப்ரைமேலும் செய்திகள்
மீன் சாப்ஸ்
கேரளா நெத்திலி குழம்பு
விறால் மீன் குழம்பு
பரலா ஜெர்க் ஃபிஷ்
காரைக்குடி மீன் மசாலா
வஞ்சிர மீன் ஃபிஷ் ஃபிங்கர்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!