SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராகி சேமியா

2021-01-05@ 17:12:04

தேவையான பொருட்கள்

ராகி சேமியா - 200 கிராம்,
தண்ணீர் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
கடுகு - அரை தேக்கரண்டி,
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி,
நறுக்கிய வெங்காயம் - 1,
நறுக்கிய பச்சை மிளகாய் - 2.


செய்முறை

ஒரு பாத்திரத்தில் ராகி சேமியா எடுத்துக் கொள்ளவும். அதில் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 2-3 நிமிடம் வரை ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்தெடுத்து கொள்ளவும். உலர்ந்த சேமியாவை இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடங்கள் வேக வைத்து பிறகு உதிர்த்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, கடலை பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் வேக வைத்த ராகி சேமியாவை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி இறக்கினால் ராகி சேமியா உப்புமா தயார். கடுகு தாளிப்புக்கு பதில் அதில் சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

  • egypt-20

    எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!

  • dell_aacccc

    கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்