SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொங்கல் கதம்ப சாம்பார்

2021-01-05@ 17:09:36

தேவையான பொருட்கள்

முருங்கைக்காய்,
வள்ளிக்கிழங்கு,
கருணைக்கிழங்கு,
அவரைக்காய்,
பூசணிக்காய் - அனைத்தும்
முருங்கைக்காய் 1 துண்டுகளாக அரிந்தது.
காய்கறிகளும் ஒரே அளவாக அரிந்தது - 1 கப்,
குழைய வெந்த துவரம்பருப்பு - 1/2 கப்,
புளிக்கரைசல் - 1 கப்.

வறுத்துப் பொடிக்க:

எண்ணெய் - 1 டீஸ்பூன்,
வரமிளகாய் - 3,
தனியா - 2 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 5 டேபிள் ஸ்பூன்,

தாளிக்க:

எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1,
கறிவேப்பிலை -6 இதழ்கள்,
பெருங்காயம் - 1 டீஸ்பூன்.

மேலே தூவுவதற்கு:

இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய்த்துருவல் வெறும் வாணலியில் வறுத்தது.


செய்முறை

வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து மிக்ஸியில் நீர் விட்டு நைசாக கெட்டியாக அரைக்கவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் 1 கப் புளிக்கரைசல் ஊற்றி மேலும் 1 கப் நீர் சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து அரிந்த காய்கறிகள் சேர்த்து வேக விடவும். காய்கள் வெந்ததும் துவரம்பருப்பினைச் சேர்த்து ஒரு கொதி விட்டு அரைத்த விழுதினைச் சேர்த்து தேவைப்பட்டால் 1/4 கப் நீர் சேர்த்து எல்லாவற்றையும் கலக்கிவிட்டு மீண்டும் இரண்டு கொதி விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து மல்லித்தழை தூவி வறுத்த தேங்காய்த்துருவல் தூவி இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • george-floyd-21

    நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!

  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

  • egypt-20

    எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்