SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செட்டிநாடு உப்புக்கறி

2020-12-28@ 17:34:20

தேவையான பொருட்கள்

கோழிக்கறி - 1/2 கிலோ,
வரமிளகாய் - 10,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்,
மல்லித்தூள் -1/2 டீஸ்பூன்,  
உப்பு - தேவைக்கு,
இஞ்சி - சிறிது,
பூண்டு - 5 பல்,
சின்ன வெங்காயம் - 10,
கறிவேப்பிலை - சிறிதளவு.


செய்முறை

முதலில் கறியை சிறு துண்டுகளாக நறுக்கி  சுத்தமாக கழுவவும். கறித்துண்டுகளை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறி வைக்கவும். வரமிளகாயை  சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து வரமிளகாய் சேர்த்து வதக்கவும். அதன் விதைகள் பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கோழிக்கறியை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு  உடன் தக்காளி சேர்த்து வதக்கவும். வரமிளகாய், தக்காளி இரண்டும் தன் தோல் தளிந்து வரும்வரை மிதமான தீயில் வதக்க வேண்டும். அதுவே  இந்தக் கறியின்  தனிச்சிறப்பு. மிளகாய்த்தூள், மல்லித்தூள் ஒரு கோப்பைத் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து  தீயை மென்மையாக  வேக விடவும். பிறகு நீர் வற்றி வரும் வரை வறுத்து மேலே சிறிது கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்