சிவப்பரிசி கொழுக்கட்டை
2020-12-24@ 16:32:45

தேவையான பொருட்கள்
வறுத்த சிவப்பு அரிசி மாவு - 1 கப்,
தேங்காய் - 1/2 கப்,
கறிவேப்பிலை - சிறிது,
பச்சை மிளகாய் - 1,
பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு,
கடுகு - தலா 1/4 டீஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்.
செய்முறை
தேங்காயை துருவிக் கொள்ளவும். கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிவப்பு அரிசி மாவு, தேங்காய், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், ஊறிய பாசிப்பருப்பு, உப்பு, எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து மாவில் கொட்டவும். வெதுவெதுப்பான நீரை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 10 முதல் 15 நிமிடம் வரை வேக வைத்து எடுக்கவும்.
Tags:
சிவப்பரிசி கொழுக்கட்டைமேலும் செய்திகள்
கேழ்வரகு வடை
தவலை அடை
கேழ்வரகு பக்கோடா
நெல்லிக்காய் பச்சடி
ராகி சேமியா கேரட், கோஸ் அடை
5 மாவு மிக்ஸ் பணியாரம்
06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!