பிரெட் ஆம்லெட்
2020-12-22@ 12:48:11

தேவையான பொருட்கள்
பிரெட் - 4,
முட்டை - 3,
வெங்காயம் - 1 கப்,
கொத்தமல்லி - 1/4 கப்,
பச்சை மிளகாய் - 3 (சிறியதாக நறுக்கியது),
பட்டர் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
குரு மிளகு பொடி - தேவைக்கேற்ப,
சாட் மசாலா - தேவைக்கேற்ப.
செய்முறை
பிரெட்டை பட்டர் சேர்த்து டோஸ்ட் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை சேர்த்து நுரைக்க பீட் செய்துகொள்ளவும். அதில் வெங்காயம், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், உப்பு, மிளகு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பின் தோசைக்கல்லை சூடு செய்து பட்டர் சேர்த்து அதன்மேல் முட்டை கலவையை ஊற்றி அதன்மேல் பிரட்டை வைத்து நான்கு பக்கமும் மடித்துக் கொள்ளவும். பின் அதன்மேல் சாட் மசாலாவை தூவி இரண்டாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். இதனுடன் தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும். இப்போது சுடச்சுட பிரெட் ஆம்லெட் ரெடி. பிரெட் ஆம்லெட்டை 3 முதல் 5 நிமிடம் வரை வேக வைக்கவும்.