கிழங்கு ரோல் சமோசா
2020-12-21@ 16:16:48

தேவையான பொருட்கள்
மைதா - 1 கப்,
உப்பு - 1/4 டீஸ்பூன்,
கருப்பு எள்ளு - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
கிழங்கு - 1 கப், (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 1/4 கப்,
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்,
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
பச்சை மிளகாய் - 2,
கார்ன் ஃப்ளவர் - 3 டீஸ்பூன்.
செய்முறை
மைதா, உப்பு, கருப்பு எள்ளை ஒரு பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போன்று கலந்துகொள்ளவும். பின் அதை 20 நிமிடம் ஊற வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் கிழங்கு, வெங்காயம், சீரகப்பொடி, சாட் மசாலா, உப்பு, பச்சை மிளகாய், கார்ன் ஃப்ளவர் மாவு சேர்த்து கலந்துகொள்ளவும். கையில் எண்ணெய் தடவி பொட்டேட்டோ பால் செய்து வைக்கவும். ஊற வைத்த மாவை எடுத்து சப்பாத்தி போன்று உருட்டி வைத்து அதன் ஓரங்களை வெட்டி எடுத்துப்பின் மீதி இருக்கும் மாவை நேராக வெட்டி வைத்துக்கொள்ளவும். பின் அதில் ஒரு துண்டை எடுத்து அதில் பொட்டேடோ பாலை வைத்து நேராக உருட்டிக்கொள்ளவும். அதில் டூத்பிக் ஒன்றை சொருகவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி அதை பொரித்து எடுத்தால் சுவையான கிழங்கு ரோல் சமோசா ரெடி.
Tags:
கிழங்கு ரோல் சமோசாமேலும் செய்திகள்
பட்டர் ஃப்ரூட் மோஸ்
இளநீர் புட்டிங்
இளநீர் பிரியாணி
சேமியா ஸ்டஃப்டு பிரெட்
பனீர் பால்ஸ்
ஃப்ரூட் கஸ்டர்ட்
நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!