சில்லி இட்லி
2020-12-14@ 14:41:21

தேவையான பொருட்கள்
இட்லி - 4,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
பூண்டு - 1 டீஸ்பூன்,
இஞ்சி - 1/2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
பெரிய வெங்காயம் - 1 கப்,
குடை மிளகாய் - 1/2 கப்,
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்,
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்,
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லி இலை - 1/4 கப்.
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி இட்லி துண்டுகளை பொரித்து எடுத்துக்கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ், உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் பொரித்த இட்லி துண்டுகளைப் போட்டு மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். 2 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்கவும். பின் கொத்தமல்லி இலையை தூவவும். கமகமக்கும் சில்லி இட்லி இப்போது ரெடி.
Tags:
சில்லி இட்லிமேலும் செய்திகள்
உருளை டொமேட்டோ ஃப்ரை
வெங்காயம் கார துவையல்
க்ரிஸ்பி பேபிகார்ன் சில்லி
வரமிளகாய்த் துவையல்
வெஜ் கிரிஸ்பி
கார சோள பணியாரம்
06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!