பிரெட் சில்லி
2020-12-10@ 14:23:54

தேவையான பொருட்கள்
பிரெட் - 4 (சிறு சிறு துண்டுகளாக),
எண்ணெய் - தேவைக்கேற்ப,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
இஞ்சி,
பூண்டு, பேஸ்ட் - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1,
வரமிளகாய் - 1,
கறிவேப்பிலை - சிறிதளவு,
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது),
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது),
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
குடை மிளகாய் - 1/2 கப்,
கொத்தமல்லி - 1/4 கப்.
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி பிரெட் துண்டுகளை ஃப்ரை செய்துகொள்ளவும். பின் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் இஞ்சி, பூண்டு, பேஸ்ட், பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை, பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் அதில் தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்ததூள், உப்பு, குடை மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கியவுடன் அதில் பிரெட் துண்டுகளைப் போட்டு கலந்துவிட்டு பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் கம கமக்கும் பிரெட் சில்லி ரெடி.
Tags:
பிரெட் சில்லிமேலும் செய்திகள்
உருளை டொமேட்டோ ஃப்ரை
வெங்காயம் கார துவையல்
க்ரிஸ்பி பேபிகார்ன் சில்லி
வரமிளகாய்த் துவையல்
வெஜ் கிரிஸ்பி
கார சோள பணியாரம்
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!