SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவதானிய தோசை

2020-12-08@ 15:10:07

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கைப்பிடி,
புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி,
உளுந்து - ஒரு கைப்பிடி,
பாசிப்பயறு- ஒரு கைப்பிடி,
கொண்டைக்கடலை - ஒரு கைப்பிடி,
தட்டைப் பயிறு - ஒரு கைப்பிடி,
கேழ்வரகு - ஒரு கைப்பிடி,
கம்பு -ஒரு கைப்பிடி,
பார்லி - ஒரு கைப்பிடி,
காய்கறிக் கலவை துருவியது - ஒரு கைப்பிடி (கேரட், பீன்ஸ்),
இஞ்சி  - 1 துண்டு,
பெரிய வெங்காயம் - ஒன்று துருவியது,
தேங்காய் -ஒரு கப் துருவியது.
கொத்துமல்லி - ஒரு டீஸ்பூன்  

அரைக்க:

வரமிளகாய் - 4,
சோம்பு - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயம் - ஒரு கட்டி,
உப்பு - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை:

பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்தைக் கழுவி ஒன்றாக ஊறவைக்கவும். பச்சைப் பயறு, தட்டைப் பயறு, கொண்டைக் கடலையை ஒன்றாகக் கழுவி ஊறவைக்கவும். கம்பு, பார்லி, கேப்பையைத் தனித்தனியாக கழுவி காயவைத்து மிக்ஸியில் குருணையாக பொடித்துக் கொள்ளவும். பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்தைக் கொரகொரப்பாக அரைக்கவும். பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு, கொண்டை கடலையையும் கொரகொரப்பாக அரைக்கவும். இரண்டையும் சேர்த்து கம்பு, கேப்பை, பார்லிக் குருணை பொடியைக் கலக்கவும். உப்பு சேர்க்கவும். வரமிளகாயையும் சோம்பையும் அல்லது பெருங்காயத்தையும் அரைத்துச் சேர்க்கவும். தேங்காய்த் துருவல், காய்கறிக் கலவை, வெங்காயத் துருவல், கொத்துமல்லி சேர்த்து உப்பு போதாவிட்டால் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து தோசைக்கல்லில் தோசைகளாக சுட்டு எடுக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 06-03-2021

    06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • military-helicopter5

    துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!

  • 05-03-2021

    05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 100farmmmm

    100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?

  • train4

    கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்