SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழைக்காய் பொடி மாஸ்

2020-11-23@ 14:44:47

தேவையான பொருட்கள்

முற்றிய வாழைக்காய் - 2,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,  
கடுகு - 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு,
உ.பருப்பு - தலா 1 டேபிள் ஸ்பூன்,  
வரமிளகாய் - 1,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - 6 இதழ்கள்,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
கொர கொரப்பாகப் பொடித்த மிளகு,
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்.


செய்முறை

வாழைக்காயை அடிப்பகுதியையும், நுனிப்பகுதியையும் மட்டும் அரிந்துவிட்டு வாழைக்காயை இரண்டாக அரிந்து உப்பு சேர்த்து வேக விடவும். வெந்ததும் தோலை உரித்துவிட்டு வாழைக்காயை கேரட் துருவியில் துருவவும். வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தாளித்து கறிவேப்பிலை சேர்த்து வரமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது வதக்கி பெருங்காயம் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கி கேரட் துருவியில் துருவிய வாழைக்காய் துருவல் சேர்த்து வதக்கி மிளகு, சீரகத்தூள் தூவி தேங்காய்த்துருவல் சேர்த்துக்கிளறி இறக்கி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.

குறிப்பு: போகிப்பண்டிகை (மார்கழி மாத இறுதி நாள்) அன்று படைக்கும் சமையலில் கட்டாயம் வாழைக்காய் இடம் பெறும். வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்க்காமலும் செய்யலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

  • bogi13

    பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

  • 13-01-2021

    13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-vaccine12

    கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்