பீட்ரூட் கேசரி
2020-11-23@ 14:43:45

தேவையான பொருட்கள்
ரவை - 1/2 கப்,
சர்க்கரை - 3/4 கப்,
பீட்ரூட் சாறு - 1 கப்,
தண்ணீர் - 1/2 கப்,
நெய் - 6 டீஸ்பூன்,
முந்திரி - 8 - 10,
ஏலக்காய் பவுடர் - 1/4 டீஸ்பூன்,
உலர்திராட்சை - 5 - 7.
செய்முறை
முதலில் வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பு, உலர் திராட்சையை பொன் நிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அதே நெய் வாணலியில் ரவையை 4 நிமிடத்திற்கு மணம் வரும்வரை மிதமான தீயில் பொன் நிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். கடாயில் 1 கப் பீட்ரூட் சாறு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதித்த நீரில் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கட்டி இல்லாமல் கிளறவும். 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும். இப்பொழுது சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிளறவும். நெய், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பரிமாறவும்.
Tags:
பீட்ரூட் கேசரிமேலும் செய்திகள்
பீட்ரூட் ஆரோக்கிய அல்வா
பீட்ரூட் இனிப்பு அப்பம்
ஹனி சில்லி பொட்டேடோ
தினை அல்வா
ரவை ஸ்வீட் கொழுக்கட்டை
தேன் நெல்லிக்காய்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!