மணத்தக்காளி பலதானிய அடை!
2020-10-22@ 14:01:49

தேவையானப் பொருட்கள்
மணத்தக்காளிக் கீரை - 1 கட்டு,
பலதானியக் கலவை மாவு - 2 கப்,
கேரட் - 1/2 கப்,
வெங்காயம் - 3,
பச்சை மிளகாய் - 4,
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
முதலில் மணத்தக்காளிக் கீரையை சுத்தப்படுத்தி, பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கித் தனியாக வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பலதானியக் கலவை மாவைச் சேர்த்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், மணத்தக்காளிக் கீரை, பச்சை மிளகாய், தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். 15 நிமிடங்கள் மாவை ஊற வைக்கவும். பின்னர் அடுப்பில் தோசைக் கல் சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை சின்னச் சின்ன அடைகளாகத் தட்டி இரண்டு பக்கங்களும் வேகவிடவும். தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.