SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேங்காய் கேக்

2020-10-21@ 14:56:22

என்னென்ன தேவை?

துருவிய தேங்காய் - 1½ கப்,
கடலை மாவு - 1/4 கப்,
சர்க்கரை - 2 கப்,
பால் - 1 கப்,
நெய் - 1/2 கப்,
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் கடலை மாவினை வறுத்துத் தனியே வைக்கவும். அதே கடாயில் 1/4 கப் நெய் விட்டு தேங்காய்த்துருவலை வறுத்து, பால், கடலை மாவை சேர்த்து, கட்டியில்லாமல் கைவிடாமல் கிளறவும். இடை இடையே நெய் சேர்க்கவும். தேங்காய், மாவு இரண்டும் வெந்ததும் சர்க்கரை, ஏலப்பொடி, மொத்த நெய்யையும் சேர்த்து கைவிடாமல் கிளறவும். கைகளில் ஒட்டாத பதம் வந்ததும், தட்டில் நெய்யை லேசாக தடவி கொட்டி, ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்பு: தேங்காய் கேக்கை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து துண்டுகள் போட்டால் நன்றாக துண்டுகள் போட வரும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்