இளநீர் ஜவ்வரிசி கீர்
2020-10-07@ 14:25:47

என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை தேங்காய் - 100 கிராம்,
ஜவ்வரிசி - 50 கிராம்,
துருவிய வெல்லம் - 150 கிராம்,
பால் - 100 மி.லி.,
தேங்காய்ப்பால் - 200 மி.லி.,
பொடியாக நறுக்கிய பிஸ்தா,
பாதாம் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் - 300 மி.லி.,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் ஜவ்வரிசி, தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். நான்ஸ்டிக் பேனில் நெய் சேர்த்து வெந்த ஜவ்வரிசியைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெல்லத்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து பிரட்டவும். பின்பு அதில் பால் சேர்த்து சிறிது நேரம் மிதமானச் சூட்டில் கொதிக்க விடவும். பொடியாக நறுக்கிய வழுக்கை இளநீர் தேங்காய், பிஸ்தா, பாதாம் கலந்து 5 நிமிடங்கள் மிதமானச் சூட்டில் கொதிக்க விடவும். ஓரளவு ஜவ்வரிசி கலவை தயாரானதும், தேங்காய்ப்பாலைச் சேர்த்து சிம்மில் வைத்து லேசாக கொதிக்க விட்டு இறக்கவும். கண்ணாடி பவுலில் ஊற்றி சூடாகவோ அல்லது ஜில்லென்றோ பரிமாறவும்.
குறிப்பு: கீர் மிகவும் கடினமாக இல்லாமல், குடிக்கும் பதத்திற்கு இருக்க வேண்டும்.
Tags:
இளநீர் ஜவ்வரிசி கீர்மேலும் செய்திகள்
பனீர் பால்ஸ்
கிழங்கு ரோல் சமோசா
ஃப்ரூட் கஸ்டர்ட்
லெமன் சேமியா பிடி கொழுக்கட்டை
வெள்ளரிக்காய் தக்காளி சாலட்
மாம்பழ சேமியா குல்ஃபி
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!