சிறுதானிய அடை
2020-10-05@ 17:25:19

தேவையானவை
* கம்பு - கால் கிலோ
* கேழ்வரகு - கால் கிலோ
* சோளம் - கால் கிலோ
* கொள்ளு - கால் கிலோ
* பாசிப்பயறு - கால் கிலோ
* குதிரைவாலி - கால் கிலோ
* சாமை அரிசி - கால் கிலோ
* வரகரிசி - கால் கிலோ
* முழு கறுப்பு உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்
* கொண்டைக்கடலை - 4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 10 பல்
* உப்பு - சுவைக்கு
* எண்ணெய் - சிறிதளவு.
* முருங்கைகீரை - 2 கைப்பிடி.
செய்முறை
வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும். கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப்பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி, முழு கறுப்பு உளுத்தம் பருப்பு, கொண்டைக்கடலை அனைத்தையும் காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும். இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை உப்பு, முருங்கைகீரை போட்டு நன்றாக கரைத்து கொள்ளவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய்விட்டு அடையாக ஊற்றி, இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையானஅடை தயார்.
Tags:
சிறுதானிய அடைமேலும் செய்திகள்
கேழ்வரகு வடை
தவலை அடை
கேழ்வரகு பக்கோடா
நெல்லிக்காய் பச்சடி
ராகி சேமியா கேரட், கோஸ் அடை
5 மாவு மிக்ஸ் பணியாரம்
06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!