SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

ஜவ்வரிசி அப்பளம்

2020-10-01@ 14:46:57

என்னென்ன தேவை?

ஜவ்வரிசி - 4 கப்,
உப்பு - தேவைக்கு,
சீரகம் - 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 3,
நல்லெண்ணெய் - 8 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

ஜவ்வரிசியை கழுவி 6 கப் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற விடவும். மறுநாள் காலை ஊறியுள்ள ஜவ்வரிசியை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு, 8 கப் தண்ணீர், உப்பு, சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பச்சைமிளகாயை நைசாக அரைத்து அதையும் கலவையில் சேர்த்து கைவிடாமல் கிளறவும். ஜவ்வரிசி நன்கு வெந்து பளபளப்பாக வந்ததும் இறக்கவும். வெயிலில் பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து முழுவதும் நல்லெண்ணெய் தடவி கரண்டியால் ஜவ்வரிசி கலவையை ஊற்றவும். காலையில் ஊற்றினால் மதியம் ஒவ்வொரு அப்பமாக எடுத்து மறுபுறம் திருப்பி வைக்கவும். மாலையில் ஓரளவு காய்ந்து விடும். மறுநாள் ஒரு தட்டில் இடைவெளி விட்டு அப்பளங்களை காயவைக்கவும். 3 நாட்கள் காயவைக்கவும். துணியிலும் காயவைக்கலாம். சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பயன்படுத்தலாம்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்