SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கன் சாப்ஸ்

2020-09-28@ 12:22:51

என்னென்ன தேவை?

சிக்கன் லெக் பீஸ் பெரியது - 4,
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
மோர் - 2 டம்ளர்,
முட்டை - 1,
பால் - 4 டீஸ்பூன்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
மைதா - 1/2 கப்,
கார்ன்ஃப்ளேக்ஸ் - 2 கைப்பிடி,
மிளகுத்தூள்,
ஓரிகானோ,
மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - தலா 1/2 டீஸ்பூன்,
சில்லி ப்ளேக்ஸ் - 1/4 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய்,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் மோர், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, சிக்கன் சேர்த்து கலந்து 3 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் முட்டை, பால், வெண்ணெய், உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, கார்ன்ஃப்ளேக்ஸ், மிளகுத்தூள், ஓரிகா னோ, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். மோரில் ஊறிய சிக்கனை எடுத்து முட்டை கலவையில் நனைத்து மைதா கலவையில் பிரட்டி மீண்டும் முட்டை மற்றும் மைதா கலவையில் பிரட்டி கொள்ளவும். இவ்வாறு அனைத்து சிக்கனையும் இருமுறை பிரட்டி வைத்து கொள்ளவும். கடாயில் பொரிக்க எண்ணெயை சூடாக்கி மிதமான சூட்டில் வைத்து சிக்கனை தனித்தனியே பொரித்தெடுக்கவும். அப்பொழுதுதான் சிக்கன் உள் பக்கம் வரை வேகும். டொமேட்டோ கெட்சப், மையோ னைஸ் கொண்டு சூடாக பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்