SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரட் தக்காளி சூப்

2020-09-28@ 12:21:34

என்னென்ன தேவை?

கேரட் - 1,
பழுத்த பெங்களூர் தக்காளி - 3,
பெரிய வெங்காயம் - 1/2 அளவு,
கொத்தமல்லித்தழை - சிறிது,
தண்ணீர் - 400 மி.லி.,
உப்பு,
மிளகுத்தூள் - தேவைக்கு,
கிராம்பு - 2,
பூண்டு - 2 பல்,
பட்டை - 1/2 இன்ச் அளவு.


எப்படிச் செய்வது?

குக்கரில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், கேரட், பூண்டு, பட்டை, கிராம்பு, மிளகுத்தூள், தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 2 விசில் விட்டு தக்காளியை வேகவிடவும். சூடு ஆறியதும் நன்கு மசித்து வடித்துக் கொள்ளவும். குறைவான சூட்டில் 300 மி.லி. வரும்வரை சூப்பைச் சூடு செய்து, உப்பு சேர்த்து கலந்து, நறுக்கிய கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: சூப்பை கொதிக்க வைத்தால் அதிலுள்ள சத்துக்கள் வீணாகி விடும். ஆகவே பாத்திரத்தை மூடியோ அல்லது குக்கரில் வைத்தோ சூப் செய்யவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • labor8

    ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!

  • transgender8

    நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்

  • nasaaa_mmm

    செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

  • 08-03-2021

    08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-03-2021

    07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்