SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பருப்பு பாயசம்

2020-09-16@ 16:43:10

தேவையான பொருட்கள்
 
பாசிப்பருப்பு - 1/2 கப்,
வெல்லம் -  1/2 கப்,
தேங்காய்ப்பால் - 1/2 கப்,
ஏலக்காய் பொடி -  1/4 டீஸ்பூன்,
முந்திரி,
திராட்சை - தலா 10,
நெய் - தேவைக்கு.


செய்முறை

பாசிப்பருப்பை மணம் வரும் வரை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக்கொள்ளவும். பாசிப்பருப்புடன் 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் சத்தம் வரை வேக வைத்துக் கொள்ளவும். வேக வைத்ததை நன்கு மசித்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைத்து
வடிகட்டிக்கொள்ளவும். வெல்லக்கரைசலை வெந்த பருப்பில் ஊற்றி நன்கு கிளறி விடவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து பாயசத்தில் போடவும். ஏலக்காய் பொடியை சேர்த்து கலந்து விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கவும். தேங்காய்ப்பால் கொதித்தால் திரிந்து விடும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dmk28

    புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

  • india-jappan28

    வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

  • soldier28

    தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

  • balaji28

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு!: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..!!

  • ukraine28

    உக்ரைனில் கோர விபத்து: ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி பலி..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்