SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்பிள் ஜீரா

2020-09-15@ 16:55:06

என்னென்ன தேவை?

அரைத்து வைத்த ஆப்பிள் விழுது - 150 கிராம்,
சர்க்கரை - 200 கிராம்,
நெய் - 2 டேபிள்
ஸ்பூன்,
பால் - 400 மி.லி. + 50 மி.லி.,
பொடியாக நறுக்கிய பாதாம் - 2 டேபிள்ஸ்பூன்,
ரவை - 100 கிராம்,
பொடியாக சீவிய முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

ஆப்பிளின் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, 50 மி.லி. பாலைச் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். நான்ஸ்டிக் பேனில் நெய்யைச் சேர்த்து பாதாம், முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். மீதியுள்ள நெய்யில், மிதமானச் சூட்டில் ரவையைப் பொன்னிறமாக வறுத்துக் கொண்டு, 1 கப் தண்ணீர் சேர்த்து ரவையை வேகவைத்துக் கொள்ளவும். அதனுள் பாலைச் சேர்த்து மிதமானச் சூட்டில் ரவை கலவையை கிளறவும். இத்துடன் சர்க்கரையைச் சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும். பால், வேகவைத்த ரவையுடன் சேர்ந்து சுண்டியதும், ஆப்பிள் விழுதை சேர்த்து 5-10 நிமிடங்கள் கலவையைச் சூடு செய்து இறக்கவும். நெய்யில் வறுத்த பாதாம், முந்திரியை அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

குறிப்பு:

பழுத்த மாம்பழம், சப்போட்டாவிலும் ஜீராவைச் செய்யலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • up30

    உ.பி.யில் வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்: குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வலுக்கும் போராட்டம்..!!

  • elephant30

    போட்ஸ்வானாவைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயில் தொடரும் சோகம்!: பாக்டீரியா நோயால் 2 மாதங்களில் 34 யானைகள் உயிரிழப்பு..!!

  • newyark30

    கொரோனாவின் தாக்கம் குறைந்தது!: நியூயார்க் நகரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • road30

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதல்!: பொதுமக்கள் 15 பேர் உயிரிழப்பு..!!

  • 30-09-2020

    30-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்