SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வஞ்சிரம் மீன் குழம்பு

2020-09-09@ 17:59:24

தேவையான பொருட்கள்

வஞ்சிரம் மீன் - 200 கிராம்,
சிறிய வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 150 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது - 80 கிராம்,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - 1 கொத்து,
கடுகு - 5 கிராம்,
வெந்தயம் - 5 கிராம்,
மிளகு - 10 கிராம்,
சீரகம் - 5 கிராம்,
சோம்பு - 5 கிராம்,
தேங்காய் விழுது - 100 கிராம்,
எண்ணெய் - 100 மி.லி.கிராம்,
கலந்த மிளகாய்த்தூள் - 20 கிராம்,
மஞ்சள் தூள் - 5 கிராம்,
தனி மிளகாய்த்தூள் - 10 கிராம்,
புளி - 15 கிராம்,
உப்பு - தேவைக்கு,
பெரிய வெங்காயம் - 1.


செய்முறை

மிளகு, சீரகம், சோம்பு, சின்ன வெங்காயத்தை எண்ணையில் வதக்கி பிறகு அரைத்து தனியாக வைக்கவும். கடாயில் எண்ணை சேர்த்து அதில் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும், பிறகு பெரிய வெங்காயத்தை ேசர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் வதக்கியதும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கலந்த மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி நன்கு மசிந்து வரவேண்டும். பிறகு புளி தண்ணீர் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவேண்டும். பிறகு மீன் துண்டுகளை சேர்த்து மூடிப்போட்டு அடுப்பை அணைத்துவிடவேண்டும். மீன் அந்த சூட்டிலேயே வெந்திடும். பிறகு கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அலங்கரிக்கவும். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்